< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தொடர் மழை: தமிழகத்தின் 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!
|14 Nov 2023 5:48 AM IST
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருகிறது.
சென்னை,
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, தமிழகம் மற்றும் புதுவையின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், கடலூர், மயிலாடுதுறை மற்றும் விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களில் நேற்று முதல் மழை தொடர்ந்து பெய்துவருகிறது. இதன் காரணமாக இந்த 3 மாவட்டங்களுக்கு மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.
அத்துடன், தொடர் மழை காரணமாக புதுச்சேரி மற்றும் புதுச்சேரிக்கு உட்பட்ட காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.