< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தொடர் பண்டிகை காலம்...! ரூ.41 ஆயிரத்தை தாண்டிய தங்கத்தின் விலை...!
|31 Dec 2022 10:45 AM IST
தொடர்ச்சியாக விசேஷ தினங்கள் வருவதால் தங்கத்தின் விலை ரூ.41 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
சென்னை,
தங்கம் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.312 வரை அதிகரித்தது. புத்தாண்டு, பொங்கல் பண்டிகை என்று விசேஷ தினங்கள் வருகிறது. இந்த நேரத்தில் தங்கம் விலை அதிகரித்து வந்தது நகை வாங்குவோரை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று ஒரு சவரனுக்கு 120 உயர்ந்து 22 கேரட் தங்கம் 41 ஆயித்து 40 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோன்று ஒருகிராம் தங்கம் ரூ.15 அதிகரித்து 5 ஆயிரத்து 130-க்கு விற்பனையாகிறது.