< Back
மாநில செய்திகள்
தொடர்ந்து உயரும் தொற்று: தமிழ்நாட்டில் 20 பேருக்கு கொரோனா
மாநில செய்திகள்

தொடர்ந்து உயரும் தொற்று: தமிழ்நாட்டில் 20 பேருக்கு கொரோனா

தினத்தந்தி
|
18 Dec 2023 1:31 AM IST

தமிழ்நாட்டில் நேற்று 317 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

சென்னை,

தமிழ்நாட்டில் நேற்று 317 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த வகையில் நேற்று சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தலா 5 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 4 பேருக்கும், நாமக்கல் மாவட்டத்தில் 2 பேருக்கும், காஞ்சீபுரம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. நேற்று தமிழ்நாட்டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்