< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தொடர் விடுமுறை - சிறப்பு பேருந்துகள் இயக்கம்
|12 Sept 2024 7:47 AM IST
விடுமுறை தினங்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
சென்னை,
வார விடுமுறை, மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் பிற ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், தற்போது வார விடுமுறை, முகூர்த்த தினம் மற்றும் மிலாடி நபி விடுமுறை ஆகிய தொடர் விடுமுறைகள் வர உள்ளதால், சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை முதல் 955 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து நாளை 190 சிறப்பு பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. மேலும், பெங்களூரு, கோவை மற்றும் திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.