< Back
மாநில செய்திகள்
கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம்

தினத்தந்தி
|
20 Feb 2023 12:30 AM IST

கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக சாலைப்பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் கூறினார்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் சண்முகராஜா தலைமை தாங்கி பேசினார். துணை பொதுச்செயலாளர்கள் பெருமாள், ராஜாசிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளான மார்ச் மாதம் 1-ந்தேதி 10 ஆயிரம் சாலை பணியாளர்கள் மூலம் மரம் நடும் இயக்கம் நடத்த வேண்டும். இறந்த சாலை பணியாளர்களின் குடும்பத்தினருக்கு வாரிசு அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். 2003-ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த சாலை பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட தலைவர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் மாநில தலைவர் நிருபர்களிடம் கூறுகையில், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அரசு அறிவித்திட வேண்டும். பொங்கல் போனஸ் தொகை ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 25-ந் தேதி முதல் 28-ந்தேதி வரை தாலுகா, மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். அதன் பின்னர் மாலை நேர ஆர்ப்பாட்டம், உண்ணாவிரத போராட்டம் என அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது என கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம் என்றார்.

Related Tags :
மேலும் செய்திகள்