தொடர் போராட்டம்: ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வித்துறை நாளை பேச்சுவார்த்தை
|ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வித்துறை நாளை பேச்சுவார்த்தை நடத்துகிறது.
சென்னை,
தமிழகத்தில் பழைய ஒய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இதையடுத்து ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வித்துறை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், ஆசிரியர் சங்கங்களுடனான பள்ளிக்கல்வித்துறையின் 3-ம் கட்ட ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) வின் வேண்டுகோளை ஏற்று, பள்ளிக்கல்வி இயக்குநர் தலைமையிலான பேச்சுவார்த்தை கூட்டம் நாளை (ஆக.1) நடைபெற உள்ளது. இதில் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கலாம். ஒவ்வொரு சங்கத்தின் சார்பில் ஒருவர் மட்டுமே பங்கேற்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.