< Back
மாநில செய்திகள்
கோவில் ஊழியர் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

கோவில் ஊழியர் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டம்

தினத்தந்தி
|
20 Jan 2023 2:14 AM IST

கொலை செய்யப்பட்ட கோவில் ஊழியர் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டம் நடக்கிறது.

நெல்லை அருகே உள்ள மேலசெவல் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் என்ற கிட்டுச்சாமி (வயது 55). கோவில் ஊழியரான இவரை ஒரு கும்பல் கடந்த 15-ந் தேதி கொலை செய்தது. இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர். இதற்கிடையே கிருஷ்ணன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் நேற்று 5-வது நாளாக தொடர்ந்தது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்