மாணவிகளுக்கு எதிராக தொடரும் பாலியல் துன்புறுத்தல்கள் - தலைமைச் செயலாளர் ஆலோசனை
|பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்ததன் எதிரொலியாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.
சென்னை,
தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி மையங்களில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பல வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக குற்றங்களை தடுப்பது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுவத்துவதற்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம், தலைமைச்செயலாளர் முருகானந்தம் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், ஆணையர்கள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள், கல்லூரிகளின் முதல்வர்கள், கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் துறைசார்ந்த அதிகாரிகள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலமாக கூட்டத்தில் கலந்து கொண்டனர்.