தொடர் மழை: 138 அடியை நெருங்கிய முல்லைபெரியாறு அணை
|முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் இன்று காலை 137.50 அடியாக உள்ளது.
கூடலூர்,
கேரளா மற்றும் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால் தேனி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகள், நீர்நிலைகள் நிரம்பி விட்டன. மேலும் முல்லைபெரியாறு, வைகையாறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் இன்று காலை 137.50 அடியாக உள்ளது. விரைவில் 138 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு 142 அடிவரை தண்ணீர் தேக்கப்படுமா என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். அணைக்கு 2143 கனஅடிநீர் வருகிறது. 1867 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
வைகைஅணையின் நீர்மட்டம் 70.69 அடியாக உள்ளது. 2485 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2569 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 368 கனஅடிநீர் வருகிறது. அது அப்படியே உபரியாக திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.41 அடியாக உள்ளது. 72 கனஅடி நீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 14.4, தேக்கடி 5.8, உத்தமபாளையம் 1.6 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.