< Back
தமிழக செய்திகள்
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
தமிழக செய்திகள்

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

தினத்தந்தி
|
4 Aug 2022 5:26 PM IST

ஒகேனக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே வருவதால், வெள்ளப்பெருக்கு தொடர்ந்து நீடிக்கிறது. இன்று காலை நிலவரப்படி 1 லட்சத்து 90 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 2 லட்சத்து 45 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.

ஒகேனக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு நேற்று இரவு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்