< Back
மாநில செய்திகள்
தொடர் கனமழை : நீலகிரி மாவட்டத்தில் இன்று  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மாநில செய்திகள்

தொடர் கனமழை : நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தினத்தந்தி
|
5 Aug 2022 7:51 AM IST

நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.அம்ரித் உத்தரவிட்டுள்ளார்

நீலகிரி,

தென்மேற்கு பருவமழை கேரளாவில் வலுவடைந்து இருக்கிறது. இதன் காரணமாகவும், தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக தமிழக பகுதிகளில் சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.

அதன்படி, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.அம்ரித் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மூன்றாம் நாளாக நீலகிரி மாவட்டத்திலுள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்