< Back
மாநில செய்திகள்
தொடர் கனமழை: நீலகிரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
மாநில செய்திகள்

தொடர் கனமழை: நீலகிரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

தினத்தந்தி
|
30 July 2024 7:11 AM IST

தொடர் கனமழை காரணமாக நீலகிரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஊட்டி,

தென்மேற்கு பருவமழை நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வார காலமாக தீவிரமாக பெய்து வருகிறது. கூடலூர், பந்தலூர் குன்னூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (செவ்வாய்க்கிழமை) ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்