< Back
மாநில செய்திகள்
தொடர் கனமழை: தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

கோப்புப்படம்

மாநில செய்திகள்

தொடர் கனமழை: தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

தினத்தந்தி
|
1 Nov 2022 6:42 AM IST

தொடர் கனமழை காரணமாக தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் சாரல் மழையுடன் நேற்று காலை பொழுது விடிந்தது.

அதன் பின்னர் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 5 மணிக்கு மேல் மீண்டும் மழை பொழிய தொடங்கியது. நேரம் செல்லசெல்ல மழை வெளுத்து வாங்கியது. இடி-மின்னலும் மிரட்டியது.

எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, பெரியமேடு, திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், அயனாவரம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு அண்ணா நகர், வில்லிவாக்கம், பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்பட நகரின் பெரும்பாலான இடங்களில் கனமழை நீடித்தது. புறநகர் பகுதிகளிலும் மழைப்பொழிவு அதிகம் இருந்தது.

இந்த மழை இன்றும் (செவ்வாய்க்கிழமை) நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை காரணமாக தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளிக்கு இன்று விடுமுறை அளித்து கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்