< Back
மாநில செய்திகள்
கொள்ளிடம் ஆற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கு - கரையோர கிராமங்களை சூழ்ந்த தண்ணீர்
மாநில செய்திகள்

கொள்ளிடம் ஆற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கு - கரையோர கிராமங்களை சூழ்ந்த தண்ணீர்

தினத்தந்தி
|
19 Oct 2022 10:21 PM IST

கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

கடலூர்,

மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் திறந்து விடப்பட்ட உபரிநீர் கல்லணை வழியாக கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

கடலூர் மாவட்டம் திருகழிப்பாலை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் சுமார் 350-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. குடியிருப்பு பகுதிகளில் இடுப்பளவிற்கு தண்ணீர் நிற்பதால், அப்பகுதிகளில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்