< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி வழக்கில் தொடரும் அதிரடி - 36 யூ டியூப் சேனல்கள் மீது வழக்கு
|22 Sept 2022 6:36 PM IST
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் விவாதம் நடத்தியது, வதந்தி பரப்பியது என 36 யூ டியூப் சேனல்கள் மீது சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கள்ளக்குறிச்சி,
கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இணையத்தில் பலரும் கருத்து பதிவிட்டு வந்தனர்.
இதனிடையே கலவரத்தை தூண்டும் வகையிலான பதிவுகள், குறிப்பிட்ட ஒரு நபர் மீது உள்நோக்கத்தோடு கருத்துக்கள் மற்றும் வீடியோ வெளியிடுவது, வதந்திகளை பரப்புவது என இருந்த 36 யூ டியூப் சேனல்கள் மீது சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அவர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது சம்பந்தமாக சிறப்பு புலனாய்வு குழு போலீசார் 6க்கும் மேற்பட்ட யூ டியூப் சேனல்களுக்கு சம்மன் அனுப்பியதோடு விசாரணையும் நடத்தி வருகின்றனர்.