< Back
மாநில செய்திகள்
தொடர் விடுமுறை: திருச்செந்தூர் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
மாநில செய்திகள்

தொடர் விடுமுறை: திருச்செந்தூர் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

தினத்தந்தி
|
14 Aug 2022 4:23 PM IST

தொடர் விடுமுறையின் காரணமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு தற்போது கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது. இதனால், திருச்செந்தூர் விழாக்கோலம் பூண்டுள்ளது. குமரி, நெல்லை போன்ற மாவட்டங்களில் இருந்து அதிகாலை முதலே வருகை தந்த பக்தர்கள், கடலில் புனித நீராடிவிட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமிதரிசனம் செய்து வருகின்றனர்.

பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதன் காரணமாக அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்