< Back
மாநில செய்திகள்
தொடர் விடுமுறை எதிரொலி: லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு பயணம்
மாநில செய்திகள்

தொடர் விடுமுறை எதிரொலி: லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு பயணம்

தினத்தந்தி
|
22 Oct 2023 10:32 AM IST

தொடர் விடுமுறை காரணமாக 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.

சென்னை,

ஆயுதபூஜை பண்டிகை தமிழ்நாடு முழுவதும் நாளை (திங்கட்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக வார விடுமுறை ஆகியவற்றை சேர்த்து தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களில் வேலைபார்க்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்த தொடர் விடுமுறையை ஒட்டி இயக்கப்பட்ட பேருந்துகள் மூலம் 3 லட்சத்துக்கு மேற்பட்டோர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதற்காக கடந்த வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு நாட்களில் மட்டும் சென்னையில் இருந்து பல ஊர்களுக்கு 5,664 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது .

மேலும் செய்திகள்