< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்

தொடர் விடுமுறை எதிரொலி: சாலையில் அணிவகுத்து நின்ற பேருந்துகள் - 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல்

தினத்தந்தி
|
2 Oct 2022 2:53 PM GMT

பூந்தமல்லி - பெங்களூர் சர்வீஸ் சாலையில் அணிவகுத்து நின்ற சிறப்புப் பேருந்துகளால் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னை,

காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை என தொடர்ந்து விடுமுறை வருவதால் வெளியூரில் தங்கி வேலை பார்ப்பவர்கள், கல்லூரிகளில் படிப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்து உள்ளனர். இதற்காக சென்னையில் இருந்து நெல்லை, திருச்சி, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.

செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1 ஆம் தேதி ஆகிய இரு தினங்களில் மொத்தமாக 5679 பேருந்துகள் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டது. கடந்த 2 நாட்களில் மொத்தமாக 3,12,345 பயணிகள் சென்னையில் இருந்து வெளியூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் பூந்தமல்லி - பெங்களூர் சர்வீஸ் சாலையில் அணிவகுத்து நின்ற சிறப்புப் பேருந்துகளால் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் பொதுமக்களுக்காக பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பூந்தமல்லி பணிமனை சர்வீஸ் சாலையில் நிறுத்தப்பட்ட சிறப்புப் பேருந்துகளால் கூடுதல் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் நத்தை போல் ஊர்ந்துசெல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் தங்களது சொந்த ஊர்களுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.

மேலும் செய்திகள்