< Back
மாநில செய்திகள்
தொடர் மழை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
மாநில செய்திகள்

தொடர் மழை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தினத்தந்தி
|
20 July 2024 11:41 AM IST

மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. நீலகிரி , கோவை மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நீலகிரியில் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மீட்பு பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் செய்திகள்