தொடர் மின்வெட்டு: நள்ளிரவில் குவிந்த மக்கள் - சென்னையில் பரபரப்பு
|சென்னை ஆலந்தூரில் மின்வெட்டை கண்டித்து மின்வாரிய அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை,
சென்னை ஆலந்தூரில் மின்வெட்டை கண்டித்து மின்வாரிய அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த ஆலந்தூரில் கடந்த 15 நாட்களாக இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுவதாகவும் இதனால் கடும் அவதிக்குள்ளாவதால் டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் நள்ளிரவில் நூறுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆலந்தூர் மின்சார வாரியத்தை முற்றுகையிட்டனர்.
மின்சாரம் முறையாக வழங்க வேண்டும் என்றும் அதுவரை கலைந்து செல்ல மாட்டோம் என்றும் கூறி இருசக்கர வாகனங்களை சாலையில் நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.