< Back
மாநில செய்திகள்
தொடர் கனமழை எதிரொலி... 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

தொடர் கனமழை எதிரொலி... 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தினத்தந்தி
|
8 Jan 2024 5:26 AM IST

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதலே மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.

சென்னை,

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களின் உள்பகுதிகளில் மிக தீவிரம் அடைந்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தென்மாவட்டங்களின் உள் பகுதிகளில் அனேக இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், வட மாவட்டங்களின் உள் பகுதிகளிலும் மழை பெய்து இருக்கிறது.

இதற்கிடையில், கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதலே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், தொடர் கனமழை எதிரொலியாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதேபோல விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்