< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நாடாளுமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து போட்டி: டிடிவி தினகரன்
|27 July 2023 6:55 PM IST
2024 நாடாளுமன்ற தேர்தலை ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து சந்திக்கவுள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்,
விருதுநகரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து சந்திக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், இனிவரும் காலங்களில் அனைத்து நிகழ்வுகளிலும் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து பயணிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.