< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
கன்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்
|8 July 2022 8:42 AM IST
சென்னை துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் கன்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றனர்.
சென்னை துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும் சரக்கு பெட்டகங்களை உரிய இடங்களுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு கொண்டு செல்லப்படும் லாரிகளுக்கு 80 சதவீதம் வாடகை உயர்த்தி தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக கன்டெய்னர் டிரைலர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை சென்னை துறைமுகத்தில் கன்டெய்னர் டிரைலர் லாரி உரிமையாளர்களுடன் சென்னை துறைமுக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் 25 சதவீதம் வாடகையை உயர்த்தி தர முடிவு செய்யப்பட்டது. தங்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால் கன்டெய்னர் டிரைலர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றனர்.