< Back
மாநில செய்திகள்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்
டிராக்டர் மீது கன்டெய்னர் லாரி மோதல்
|2 Aug 2022 10:53 PM IST
ஆம்பூர் அருகே டிராக்டர் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் 2 பேர் காயம் அடைந்தனர்.
ஆம்பூர்
ஆம்பூர் அருகே டிராக்டர் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் 2 பேர் காயம் அடைந்தனர்.
பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி கன்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. ஆம்பூைர அடுத்த குளிதிகை தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது முன்னால் சென்ற டிராக்டர் மீது லாரி மோதியது.
இந்த விபத்தில் டிராக்டா் டிைரவா் மித்திஷ், அவருடன் இருந்த இஷாந்த் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு ெசன்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்ைசக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தப்பிஓடிய கன்ெடய்னா் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
----