திண்டுக்கல்
கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து
|கொடைரோடு அருேக 4 வழிச்சாலையில் கன்டெய்னர் லாரி ஒன்று கவிழ்ந்தது.
தூத்துக்குடியில் இருந்து திண்டுக்கல்லுக்கு கன்டெய்னர் லாரி ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை, திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 32) என்பவர் ஒட்டி வந்தார். கொடைரோடு அருகே 4 வழிச்சாலையில் பொட்டிகுளம் பிரிவு பகுதியில் அந்த லாரி வந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே கவிழ்ந்தது. அப்போது லாரியில் எடுத்துவரப்பட்ட கன்டெய்னர் சாலையின் மறுபுறம் விழுந்தது. லாரி சாலையின் நடுப்பகுதியில் கவிழ்ந்தபடி கிடந்தது. இதில் டிரைவர் ஜெயக்குமார் காயமின்றி உயிர்தப்பினார். இதேபோல் லாரி கவிழ்ந்தபோது, சாலையில் வேறு வாகனம் வராததால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அம்மையநாயக்கனூர் நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவபாலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரி மற்றும் கன்டெய்னரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். இந்த விபத்து காரணமாக திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.