< Back
மாநில செய்திகள்
தலைக்குப்புற கவிழ்ந்த கன்டெய்னர் லாரி
திண்டுக்கல்
மாநில செய்திகள்

தலைக்குப்புற கவிழ்ந்த கன்டெய்னர் லாரி

தினத்தந்தி
|
24 Aug 2023 1:15 AM IST

சின்னாளப்பட்டி அருகே கன்டெய்னர் லாரி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சின்னாளப்பட்டி அருகேதிண்டுக்கல்லில் இருந்து விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நோக்கி நேற்று அதிகாலை மைதா மாவு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை, எட்டுப்பட்டியை சேர்ந்த பாரதிராஜா (வயது 27) என்பவர் ஓட்டினார்.

திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் சின்னாளப்பட்டியை அடுத்த அம்பாத்துரை அருகே லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த மினிலாரி மீது மோதாமல் இருக்க கன்டெய்னர் லாரியின் டிரைவர் திடீரென பிரேக் போட்டார். இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் கன்டெய்னர் லாரியின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் பாரதிராஜா காயமின்றி உயிர் தப்பினார். பின்னர் மாற்று லாரி மூலம் மைதா மாவு மூட்டைகள் அருப்புக்கோட்டைக்கு எடுத்துச்செல்லப்பட்டன. தொடர்ந்து ராட்சத கிரேன் மூலம் விபத்துக்குள்ளான கன்டெய்னர் லாரி மீட்கப்பட்டது. இதுகுறித்து சின்னளாப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்