< Back
மாநில செய்திகள்
எண்ணூர் கடற்கரை சாலையில் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் ஏறிய கன்டெய்னர் லாரி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

எண்ணூர் கடற்கரை சாலையில் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் ஏறிய கன்டெய்னர் லாரி

தினத்தந்தி
|
14 Oct 2023 1:58 PM IST

எண்ணூர் கடற்கரை சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி தடுப்பு சுவரில் ஏறி விபத்துக்குள்ளானது.

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹர்கின் யாதவ் (வயது 48). லாரி டிரைவரான இவர், நேற்று சென்னை துறைமுகத்தில் இருந்து கன்டெய்னர் லாரியில் இரும்பு உருளை காயில்களை ஏற்றிக்கொண்டு மராட்டிய மாநிலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

எண்ணூர் கடற்கரை சாலையில் ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்றபோது தனியார் கம்பெனியில் இருந்து வெளியே வந்த மற்றொரு லாரி சாலையின் குறுக்கே வந்ததால் டிரைவர் ஹர்கின் யாதவ், கன்டெய்னர் லாரியை சடன் பிரேக் போட்டு நிறுத்த முயன்றார். இதில் அவரது கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி, சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதியதுடன், லாரியின் முன்பக்க டயர் தடுப்பு சுவரில் ஏறி நின்றது. லாரி மோதியதில் தடுப்பு சுவர் உடைந்து சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. இது பற்றி தகவல் அறிந்துவந்த திருவொற்றியூர் போக்குவரத்து போலீசார் தடுப்பு சுவரில் ஏறி நின்றிருந்த கன்டெய்னர் லாரியை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்