< Back
மாநில செய்திகள்
கும்மிடிப்பூண்டி அருகே கன்டெய்னர் லாரி மரத்தில் மோதி கவிழ்ந்தது - டிரைவர் படுகாயம்
சென்னை
மாநில செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே கன்டெய்னர் லாரி மரத்தில் மோதி கவிழ்ந்தது - டிரைவர் படுகாயம்

தினத்தந்தி
|
12 Aug 2022 1:34 PM IST

கும்மிடிப்பூண்டி அருகே கன்டெய்னர் லாரி மரத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் படுகாயமடைந்தார்.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அமித்தேஷ் சிங் (வயது 30). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் இருந்து கார்பன் துகள்களை கன்டெய்னர் லாரியில் ஏற்றிக்கொண்டு ஆந்திர மாநிலம் சத்தியவேடு நோக்கி சென்று கொண்டிருந்தார். கவரைப்பேட்டை - சத்தியவேடு சாலையில் பூவலம்பேடு அருகே லாரி செல்லும் போது டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த டிரைவர் அமித்தேஷ் சிங், கவலைக்கிடமான நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில் பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்