< Back
மாநில செய்திகள்
மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்

தினத்தந்தி
|
1 Aug 2023 12:15 AM IST

கள்ளக்குறிச்சி கோட்டத்தில் மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் இன்று நடக்கிறது

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி மின் பகிர்மான வட்டத்தின் சார்பில் இந்த மாதத்துக்கான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் அந்தந்த கோட்ட அலுவலகங்களில் கள்ளக்குறிச்சி மேற்பார்வை மின் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெறுகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி கோட்டத்தில் இன்றும்(செவ்வாய்க்கிழமை), திருக்கோவிலூர் கோட்டத்தில் வருகிற 8-ந் தேதியும்(செவ்வாய்க்கிழமை), உளுந்தூர்பேட்டை கோட்டத்தில் வருகிற 22-ந் தேதியும்(செவ்வாய்க்கிழமை) மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் காலை 10 மணி முதல் பகல் 1 மணிவரை நடைபெறுகிறது. இதில் அந்தந்தபகுதி மின் நுகர்வோர் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்டவாறு கள்ளக்குறிச்சி மேற்பார்வை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்