நீலகிரி
நுகர்வோர் குறைதீர் ஆணைய கலந்தாய்வு கூட்டம்
|குன்னூரில் நுகர்வோர் குறைதீர் ஆணைய கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
குன்னூர்
நீலகிரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய கலந்தாய்வு கூட்டம் குன்னூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவர் டி.சித்ரா தலைமை தாங்கினார். ஆணையத்தின் உறுப்பினர் சசி ராஜா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நீலகிரியில் நுகர்வோர் அமைப்புகளால் தாக்கல் செய்யப்பட்டு நடவடிக்கையில் உள்ள நுகர்வோர் வழக்குகள் மற்றும் எதிர் காலத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை சுமுகமாகவும், விரைவாகவும் முடிப்பது, தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) மூலம் முடிக்க ேவண்டும் என்பது போன்ற கருத்துகள் விவாதிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் வழக்குகளை ஆன்லைன் மூலமாக பதிவு செய்யவும், ஆன்லைன் விசாரணை நடத்துவது குறித்து விளக்கப்பட்டது. இதில் குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம், கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்கம், புளு மவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம், ஊட்டி வட்டார நுகர்வோர் பாதுகாப்பு சங்கம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.