< Back
மாநில செய்திகள்
எளம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

எளம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தினத்தந்தி
|
15 July 2022 6:38 PM GMT

எளம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளியின் தலைமையாசிரியர் சிதம்பரம் தலைமையில் நடந்தது. இதில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை ராகமஞ்சரி வரவேற்றார். நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சங்கர், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் பற்றியும் நுகர்வோர்கள் எவ்வாறு நுகர்வோர் நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்பது பற்றியும் விளக்க உரையாற்றினார். இதில் தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவரும், பெரம்பலூர் மாவட்ட குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான எஸ்.கே.கதிரவன் சிறப்புரையாற்றி பேசும்போது, நுகர்வோர்கள் பொருட்களை வாங்கும்போது அரசு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தர முத்திரைகளை கவனித்தும், உணவு பொருட்கள் வாங்கும்போது அதன் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதியை கவனமாக பார்த்து வாங்க வேண்டும். வாங்கும் பொருட்களுக்கு தவறாமல் பில் கேட்டு வாங்க வேண்டும் என்று தெரிவித்தார். பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் தொடங்கப்பட்டதன் நோக்கங்கள் குறித்தும், அதில் மாணவர்களின் பங்கேற்பு பற்றியும் விளக்கப்பட்டது. மேலும் நுகர்வோர் பாதுகாப்பு பற்றி சொற்பொழிவாற்றிய 11-ம் வகுப்பு மாணவி அனுதேவிக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரிய ஆசிரியைகள், அனைத்து மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர். முடிவில் பள்ளியின் வரலாற்று ஆசிரியர் கணேசன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்