கரூர்
கல்வி கடனுதவி வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம்
|கல்வி கடனுதவி வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடனுதவி வழங்குவது தொடர்பாக வங்கியாளர்கள் மற்றும் அலுவலர்களுடன் முன்னேற்பாடுகள் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் தங்கவேல் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் கல்வி கடன் பெறுவது குறித்த தகவல்களை சிறந்த முறையில் வழங்க வேண்டும். அதுதொடர்பாக ஒவ்வொரு கல்லூரிக்கும் ஓரு ஆசிரியர், 2 மாணவர்களுக்கு கல்வி கடனுதவி பெறுவது தொடர்பாக பயிற்சி வழங்க வேண்டும்.அதனைத்தொடர்ந்து பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அந்த கல்லூரி கல்வி கடன்பெறுவது தொடர்பான வழிமுறைகளை ஏற்படுத்தி தரவேண்டும். மேலும் வங்கியாளர்கள் மற்றும் கல்லூரிகளை ஓருங்கிணைத்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடனுதவி பெறுவதற்கான றடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.