< Back
மாநில செய்திகள்
ஜி 20 மாநாடு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்: எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு
மாநில செய்திகள்

ஜி 20 மாநாடு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்: எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு

தினத்தந்தி
|
4 Dec 2022 12:49 PM IST

ஜி 20 மாநாட்டை நடத்துவதற்காக ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

ஜி20 மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்த உள்ளது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கான தயார் நிலை பற்றி ஆலோசனை செய்வதற்காக இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களை அழைத்து பேச மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் நாளை (திங்கட்கிழமை) டெல்லியில் ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக நாளை முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் டெல்லி செல்கிறார். இந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி மாளிகையில் நாளை மாலை 5.30 மணிக்கு இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்