< Back
மாநில செய்திகள்
வெள்ள தடுப்பு பணிகள் குறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
மாநில செய்திகள்

வெள்ள தடுப்பு பணிகள் குறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

தினத்தந்தி
|
23 Jun 2022 2:22 PM IST

வெள்ள தடுப்பு பணிகள் குறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை,

தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட லேசான காய்ச்சல் காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்தார். இதையடுத்து அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இல்ல திருமண விழா சென்னை திருவான்மியூரில் இன்று காலை நடந்தது. இந்த திருமண விழாவில் கலந்து கொண்ட முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார்.

விழாவை முடித்துக் கொண்டு புறப்பட்ட முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் வெள்ள தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் இறையன்பு, மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்