< Back
மாநில செய்திகள்
கல்குவாரி குறித்து கருத்து கேட்பு கூட்டம்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

கல்குவாரி குறித்து கருத்து கேட்பு கூட்டம்

தினத்தந்தி
|
13 Sept 2023 12:37 AM IST

கல்குவாரி குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

அன்னவாசல் அருகே காலாடிப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் சார்பில் புதிய கல்குவாரி குறித்து கருத்துகேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வக்குமார் கலந்துகொண்டு அப்பகுதி பொதுமக்களிடம் புதிய குவாரி தொடங்குவதற்கான கருத்துக்களை கேட்டறிந்தார். தொடர்ந்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு குவாரி சம்பந்தமான தங்களின் கருத்துக்களை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதில் வீரப்பட்டி வருவாய் ஆய்வாளர் ஜெயந்தி, கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) சவுந்தர்யா, பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்