< Back
மாநில செய்திகள்
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மாநில கல்விக் கொள்கை குறித்து கருத்துக்கேட்புக் கூட்டம்
மாநில செய்திகள்

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மாநில கல்விக் கொள்கை குறித்து கருத்துக்கேட்புக் கூட்டம்

தினத்தந்தி
|
20 Sept 2022 5:09 PM IST

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த கல்வியாளர்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

நெல்லை,

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாநில கல்விக் கொள்கை உருவாக்குவது தொடர்பாக கருத்துக்கேட்புக் கூட்டம், உயர்மட்டக்குழு தலைவர் முருகேசன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த கல்வியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய உயமட்டக்குழு தலைவர் முருகேசன், ஆசிரியர்களுக்கான கல்வி போதுமானதாக உள்ளதாக என்பது தொடர்பாக கருத்துக்கள் கேட்கப்பட உள்ளதாகவும், அனைத்து தரப்பினரிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டு மாநில கல்விக் கொள்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்