கள்ளக்குறிச்சி
தியாகதுருகம் அருகேபயிர் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை கூட்டம்
|தியாகதுருகம் அருகே பயிர் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தியாகதுருகம்,
தியாகதுருகம் அருகே பழைய உச்சிமேடு கிராமத்தில் வட்டார வேளாண்மைத்துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் பயிர் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதற்கு வேளாண்மை உதவி இயக்குனர் சந்துரு, அலுவலர் வனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் வரவேற்றார். வேளாண்மை துணை இயக்குனர் (திட்டம்) சுந்தரம் தலைமை தாங்கி உழவன் செயலி பயன்பாடு, தேசிய மின்னனு வேளாண் சந்தை குறித்து விளக்கம் அளித்ததோடு, வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். சிறப்பு அழைப்பாளராக வாழவச்சனூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் முத்துகிருஷ்ணன் கலந்துகொண்டு பயிர் சாகுபடி, பாதுகாப்பு தொடர்பான விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்ததோடு, அனைத்து விவசாயிகளும் சொட்டு நீர்ப்பாசனம் மூலம் பயிர் சாகுபடி செய்து பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெறவேண்டும் என ஆலோசனை வழங்கினார்.
இதில் வேளாண்மை துணை அலுவலர் அன்பழகன், விதை உதவி அலுவலர் மொட்டையாப்பிள்ளை, உதவி வேளாண்மை அலுவலர்கள் செல்வராஜ், சந்திரமோகன், வினோத், ரகுராமன், அட்மா தொழிநுட்ப பணியாளர்கள் சூரியா, ரவி, கலைவாணன் மற்றும் பயிர் அறுவடை பணியாளர்கள் சுதாகர், கிருஷ்ணா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற துணை தலைவர் மணிகண்டன் நன்றி கூறினார்.