நாமக்கல்
வட்டார சுகாதார பேரவை கலந்தாய்வு கூட்டம்
|பள்ளிபாளையம் நகராட்சி சமுதாய கூடத்தில் வட்டார சுகாதார பேரவை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
பள்ளிபாளையம் நகராட்சி சமுதாய கூடத்தில் மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் பள்ளிபாளையம் வட்டார சுகாதாரத்துறை மூலம் வட்டார சுகாதார பேரவை என்ற கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கவி தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிபாளையம் நகர மன்ற தலைவர் செல்வராஜ், நகர மன்ற துணைத் தலைவர் பாலமுருகன், குமாரபாளையம் நகர மன்ற தலைவர் சஷ்டி த.விஜய் கண்ணன், படைவீடு பேரூராட்சி தலைவர் ராதாமணி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இதில் பள்ளிபாளையம் வட்டார அளவில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடு மற்றும் சித்த மருத்துவ துறை, காச நோய் தடுப்பு பிரிவு, தொழுநோய் தடுப்பு பிரிவு, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம், அங்கன்வாடி மையம் ஆகியவற்றின் மூலம் செயல்படுத்தப்படும் சுகாதார திட்டங்கள், செயல்பாடுகள் பற்றி உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளிபாளையம் நகராட்சி ஆணையாளர் கோபிநாத், ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர்கள் திவ்யா, செந்தாமரை, வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் பாலு, சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.