< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 5ம் தேதி முதல் கலந்தாய்வு
|2 Aug 2022 5:31 PM IST
ஆகஸ்ட் 5ம் தேதி முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும் என கல்லூரி கல்வி இயக்குனர் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு வரும் 5-ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 1.3 லட்சம் இடங்களில் சேர 4 லட்சத்துக்கு மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த நிலையில் அவர்களுக்கான கலந்தாய்வு வரும் 5-ம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தரவரிசை பட்டியல் வெளியான நிலையில், கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.