< Back
மாநில செய்திகள்
கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
7 Oct 2022 1:15 AM IST

திண்டுக்கல்லில் தீபாவளி போனஸ் வழங்கக்கோரி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் தீத்தான் முன்னிலை வகித்தார். இதில் மாநில பொருளாளர் லூர்துரூபி, மாவட்ட செயலாளர் பிரபாகரன், சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் கே.ஆர்.கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள், கட்டுமான தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனசாக ரூ.5 ஆயிரம் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும். இதேபோல் ஓய்வூதியத்தை மாதந்தோறும் முறையாக வழங்க வேண்டும். மேலும் ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.





மேலும் செய்திகள்