< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
கட்டிட தொழிலாளி தற்கொலை
|29 Aug 2023 1:47 AM IST
நெல்லை அருகே கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை அருகே மேலஓமநல்லூர் முப்பிடாதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கபாண்டி மகன் ரமேஷ் (வயது 34). கட்டிட தொழிலாளி. திருமணம் ஆகாதவர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. ரமேஷ் கடந்த சில நாட்களாக சோகமாக இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் ஊருக்கு வெளியே காட்டுப்பகுதியில் ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரமேஷ் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.