< Back
மாநில செய்திகள்
கட்டிட தொழிலாளி சாவு
திண்டுக்கல்
மாநில செய்திகள்

கட்டிட தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
25 July 2022 10:51 PM IST

திண்டுக்கல் அருகே கோவில் மேற்கூரை இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி பலியானார்.

திண்டுக்கல் அருகே என்.ஜி.ஓ காலனியை அடுத்த பெரியார் காலனியை சேர்ந்தவர் முருகன் (வயது 70). கட்டிடத்தொழிலாளி. நேற்று இவர், என்.ஜி.ஓ. காலனியில் உள்ள முருகன் கோவிலின் முன்பு அமர்ந்து இருந்தார். அப்போது கோவிலின் மேற்கூரை திடீரென இடிந்து முருகன் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்