< Back
மாநில செய்திகள்
லாரி மீது மொபட் மோதல்; கட்டிட தொழிலாளி சாவு
நாமக்கல்
மாநில செய்திகள்

லாரி மீது மொபட் மோதல்; கட்டிட தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
22 Oct 2023 12:15 AM IST

நாமக்கல் அருகே லாரி மீது மொபட் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

நாமக்கல் அருகே உள்ள புலவர்பாளையத்தை சேர்ந்தவர் அழகேசன் (வயது45). கட்டிட தொழிலாளி. இவர் கீரம்பூரில் இருந்து கட்டிட பணியை முடித்துக் கொண்டு, தனது மொபட்டில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். வள்ளிபுரம்–பாரப்பட்டி சாலையில் சென்றபோது, முன்னால் சென்று கொண்டிருந்த டாரஸ் லாரியின் டிரைவர் திடீரென பிரேக் போட்டார். அப்போது பின்னால் சென்ற அழகேசன் மொபட், லாரி மீது மோதி விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அழகேசனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அழகேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்