< Back
மாநில செய்திகள்
பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய கட்டிட மேஸ்திரி கைது
மாநில செய்திகள்

பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய கட்டிட மேஸ்திரி கைது

தினத்தந்தி
|
29 Feb 2024 7:32 AM IST

8 மாதம் கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்ததால் மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா மூங்கிலேரியை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 23). கட்டிட மேஸ்திரி. இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 1½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த 8 மாதத்திற்கு முன்பு 16 வயதான பிளஸ்-2 மாணவி ஒருவர் குழந்தையை ஆசையாக பார்ப்பதற்காக காளிதாசின் வீட்டிற்கு வந்தார். அப்போது காளிதாஸ் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் இதை வெளியே யாரிடமும் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பயந்து போய் அந்த மாணவியும் இதுகுறித்து யாரிடமும் சொல்லவில்லை.

இந்த நிலையில் அந்த மாணவியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று காட்டினார்கள். அப்போது மாணவி 8 மாதம் கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் விசாரித்த போது காளிதாஸ் மாணவியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் ஊத்தங்கரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, பிளஸ்-2 மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய காளிதாசை அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் செய்திகள்