17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கட்டிட தொழிலாளி கைது
|மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தேர்ப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் என்கிற சிவா (வயது 38). கட்டிட தொழிலாளி. இவர் 17 வயது சிறுமியை கட்டிட சித்தாள் வேலைக்கு அழைத்து ெசன்று நெருக்கமாக பழகி வந்்துள்ளார். பின்னர் அந்த சிறுமியின் தாயார் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அங்கு சென்று ஆசைவார்த்தை கூறி சிறுமியிடம் தனிமையில் இருந்துள்ளார். இதனால் பயந்து போன சிறுமியின் தாயார் தனது வீட்டை வேறு கிராமத்திற்கு மாற்றி சென்றார். ஆனாலும் சிவக்குமார் அங்கு சென்று சிறுமியிடம் பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிறுமி வயிறு வலிப்பதாக கூறியதால் அவரை தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் தாயார் சிவக்குமார் மீது தாராபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிவக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.