நெல்லை சந்திப்பில் கட்டுமான பணி: ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம்
|நெல்லை சந்திப்பில் கட்டுமான பணிகள் நடைபெறுவதால், ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
நெல்லை,
நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய யார்டு பகுதிகளில் பாலங்கள் பராமரிப்பு பணி நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று ஒருசில ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்றும் சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லையில் இருந்து காலை 10.40 மணிக்கு புறப்படும் நெல்லை - திருச்செந்தூர் ரெயில் மற்றும் திருச்செந்தூரில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு நெல்லை வழியாக வாஞ்சி மணியாச்சி வரை செல்லும் ரெயில் ஆகிய 2 ரெயில்களும் இன்று முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
மேலும், நெல்லை-திருச்செந்தூர் ரெயில் இன்று மாலை 4.15 மணிக்கு பதிலாக மாலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும்
தாம்பரம்-நாகர்கோவில் இடையிலான அந்தியோதயா ரெயில் விருதுநகர் வரை மட்டுமே இயக்கப்படும். மறுமார்க்கத்தில் நாகர்கோவிலுக்கு பதிலாக விருதுநகரில் இருந்து புறப்படும்.
பாலக்காடு-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் இன்று கோவில்பட்டி வரை மட்டுமே இயக்கப்படும். மறுமார்க்கமாக இந்த ரெயில் திருச்செந்தூருக்கு பதில் கோவில்பட்டியில் இருந்து புறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.