< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
மாவட்டம் முழுவதும் கட்டுமான பணிகள் பாதிப்பு
|10 Oct 2023 12:54 AM IST
மாவட்டம் முழுவதும் கட்டுமான பணிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் குவாரி ஒப்பந்தக்காரர்கள் மற்றும் கிரஷர்உரிமையாளர்கள் 25 குவாரிகளுக்கு கனிம வளத்துறை துணை இயக்குனர் நடை சீட்டு வழங்கவில்லை எனக்கூறி தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் உள்ள 158 குவாரிகளும் செயல்படவில்லை. குவாரிகள் செயல்படாததால் ஜல்லிக்கல், கிராவல்மண், எம்.சான்ட் போன்றவை கட்டுமான பணிகளுக்கு கிடைக்காத நிலையில் மாவட்டம் முழுவதும் கட்டுமான பணிகள் முடங்கியுள்ளன. இதனால் கட்டுமான தொழிலாளர்களுக்கு வேலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.