< Back
மாநில செய்திகள்
கட்டுமானம்-அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கரூர்
மாநில செய்திகள்

கட்டுமானம்-அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
16 Oct 2023 11:06 PM IST

கட்டுமானம்-அமைப்புசாரா பொது தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு ேநற்று இந்து மஸ்தூர் சபா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ் தலைமை தாங்கினார். இதில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் ராஜசேகர், கடவூர் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், எச்.எம்.எஸ். குளித்தலை தாலுகா தலைவர் மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனா்.

கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ.7 ஆயிரம் வழங்கிட வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டம் நடைமுறையை எளிமையாக்க வேண்டும். கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதாமாதம் 10-ந்தேதிக்குள் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் நலவாரியத்திற்கு முழுமையான நிதி ஆதாரத்தை உருவாக்கிட வேண்டும். தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட 18 நலவாரியங்களின் செயல்பாட்டை ஒரே மாதிரியாக நடைமுறைப்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடந்ததாக சங்க நிா்வாகிகள் ெதரிவித்தனர்.

மேலும் செய்திகள்