< Back
மாநில செய்திகள்
திருமழிசை பேரூராட்சியில் ரூ.16½ கோடியில் நீர் தேக்க தொட்டி, ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பணி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருமழிசை பேரூராட்சியில் ரூ.16½ கோடியில் நீர் தேக்க தொட்டி, ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பணி

தினத்தந்தி
|
28 Sept 2023 4:32 PM IST

திருமழிசை பேரூராட்சியில் ரூ.16½ கோடியில் நீர் தேக்க தொட்டி, ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பணிகளை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சிக்கு உட்பட்ட பட்டேல் தெரு பகுதியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.16.48 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள், ஆழ்துளை கிணறுகள் மற்றும் நீர் ஏற்று குழாய்கள் உள்ளிட்ட பல்வேறு குடிநீர் திட்ட பணிகளுக்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

இதில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து குத்தம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.3.48 கோடியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட 15 வகுப்பறைகளை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், பூந்தமல்லி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி, பூந்தமல்லி ஒன்றிய சேர்மன் ஜெயக்குமார், திருமழிசை பேரூராட்சி மன்ற தலைவர் வடிவேலு, துணை தலைவர் மகாதேவன், திருமழிசை பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

மேலும் செய்திகள்