மயிலாடுதுறை
ரூ.47 லட்சத்தில் கால்நடை ஆஸ்பத்திரி கட்டும் பணி தொடக்கம்
|மாதானம் ஊராட்சியில் ரூ.47 லட்சத்தில் கால்நடை ஆஸ்பத்திரி கட்டும் பணி தொடக்கம்
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதானம் ஊராட்சியில் கால்நடை ஆஸ்பத்திரி கட்டிடம் சிதிலம் அடைந்து காணப்பட்டது. இந்த கட்டிடம் எப்போது இடிந்து விழுமோ என கிராம மக்கள் அச்சத்தில் இருந்தனர். இந்த கால்நடை ஆஸ்பத்திரிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் ரூ.47 லட்சம் செலவில் கால்நடை ஆஸ்பத்திரிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா அங்கு நடந்தது. விழாவிற்கு கால்நடை டாக்டர் மணிமொழி தலைமை தாங்கினார். பொதுப்பணித்துறை (கட்டிடம்) உதவிசெயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் ஜான்டிரோஸ்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். அப்போது கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் மாதானம் ஊராட்சி மன்ற தலைவர் காந்திமதிசிவராமன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கென்னடி, மாவட்ட பிரதிநிதி இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.